நபி வழி
வுளு ஒரு விளக்கம்.
1. நிய்யத்
எந்த ஒரு அமலை செய்யும் போதும் அதற்கான எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.
“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர் உமர் (ரலி) நூல் புகாரி (1)
2. வுளு செய்ய முன் பற்துலக்கிக் கொள்ளல்.
“என் சமுதாயத்திற்கு கஸ்டம் ஆகிவிடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு வுளுவிலும் பல் துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) நூல் அஹ்மத்
3. ஆரம்பத்தில் முன் கைகளைக் கழுவுதல்.
“அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நபி (ஸல்) அவர்களின் வுளுவைச் செய்து கட்டியபோது பாத்திரத்தில் இருந்து தண்ணீரை தன் கையில் ஊற்றி தனது இரு கைகளையும் மூன்று தடவைகள் கழுவினார்.”
அறிவிப்பவர் நூல் புகாரி (186)
4. வாயையும் மூக்கையும் சுத்தம் செய்தல்.
ஒரு கையால் அல்லப்படும் தண்ணீரைக் கொண்டே வாயையும்இ மூக்கையும் சுத்தம் செய்தல்.
“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வுளு செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய் கொப்பலித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்... (பின்னர்) இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்ய நான் பார்த்தேன்.”எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அதா பின் யஸார் (ரலி) நூல் புகாரி (140)
வலது கையால் தண்ணீரை செலுத்தல்
“நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு வுளுச் செயதார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇ தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்பளித்துஇ மூக்கையும் சிந்தினார்கள்இ எனக்கூறப்பட்டுள்ளது. நூல் புகாரி (160இ 164)
இடது கையால் மூக்கு சிந்தல்.
“அலி (ரலி) அவர்கள் வுளுச் செய்வதற்கான தண்ணீரை கொண்டு வரச் செய்து வாய் கொப்பலித்துஇ மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திஇ இடது கையால் சுத்தம் சேய்தார்கள்.” பின்னர் இது தான் நபி (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்கள் வுளுச் செய்த முறையாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அப்து கைர். நூல்கள் நஸாயீ (90) அஹ்மத் (1078)
5. முகத்தைக் கழுவுதல்.
ஒரு கையால் தண்ணீரை எடுத்து மரு கையுடன் சேர்த்துக் கழுவுதல்.
“நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇ ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்து அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.” அறிவிப்பவர் அதா பின் யஸார் நூல் புகாரி (140)
மூன்று தடவைகள் கழுவுதல்
“நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇ தமது கையை பாத்திரத்தில் நூலைத்து மூன்று தடவைகள் முகத்தைக் கழுவினார்கள்.” அறிவிப்பவர் யஹ்யா நூல் புகாரி (186)
தாடியைக் கோதிக் கழுவுதல்
“நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்யும் போது தண்ணீரால் தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.” அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் அஹ்மத் (24779)
6. இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்த முறையை உஸ்மான (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇ முகத்தையும்இ மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவைகள் கழுவினார்கள். அறிவிப்பவர் ஹூம்ரான் நூல் புகாரி (160)
7. தலையை மஸஹ் செய்தல்
இரு கைகளாலும் தலை முழுவதையும் ஒரு தடவை மாத்திரம் மஸஹ் செய்தல்.
“நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇ கையைப் (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கத்திலிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.” அறிவிப்பவர் யஹ்யா நூல் புகாரி (186)
8. காதுகளை மஸஹ் செய்தல்.
தலையை மஸஹ் செய்த அதே ஈரக் கைகளால் காதுகளை மஸஹ் செய்தல்.
நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்த போது தலைக்கும்இ தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உற்பகுதியிலும்இ பெரு விரலை காதுகளின் வெளிப் பகுதியிலும் வைத்து காதுகளையும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் நஸாயீ (101)
9. கால்களைக் கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் வுளுச் செய்த முறையை உஸ்மான (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇ இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடகைள் கழுவினார்கள்.
அறிவிப்பவர் ஹூம்ரான் நூல் புகாரி (160)
Wednesday, October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment